Friday, 16 October 2015

திருநங்கைகள் உலகம் அதிசயங்கள், அதிர்ச்சிகள் நூலாசிரியர்: பால்சுயம்பு






நூல்: திருநங்கைகள் உலகம்
       அதிசயங்கள், அதிர்ச்சிகள்


நூலாசிரியர்: பால்சுயம்பு
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்,
33/15, எல்டாம்சு சாலை,
ஆழ்வார்ப்பேட்டை,
சென்னை - 600 018
தொலைப்பேசி: 044 4200 9601, , 03, 04
மின்னஞ்சல்: support@nhm.in
இணையம்: www.nhm.in
பக்: 279
விலை: உருவா 150

Wednesday, 14 October 2015

நூல்: அரவாணிகளும் மனிதர்களே!


நூல்: அரவாணிகளும் மனிதர்களே!

நூலாசிரியர்: அ.மங்கை
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
41 - B, சிட்கோ தொழிற்பேட்டை
அம்பத்தூர், சென்னை - 600 098
தொலைப்பேசி: 044 2625 8410, 2625 1968, 2635 9906

விலை: உருவா 20

நூல்: கூடங்குளம் அணு உலையை இழுத்துமூடு


நூல்: கூடங்குளம் அணு உலையை இழுத்துமூடு

வெளியீடு: மக்கள் கலை இலக்கியக் கழகம்
            16, முல்லை நகர் வணிக வளாகம்
            2 - ஆவது நிழற்சாலை
            அசோக் நகர், சென்னை - 600 083
            தொலைப்பேசி: 044 2371 8706
                              044 - 2841 2367
            அலைப்பேசி:   94453 84519

விலை: உருவா 5

Saturday, 18 July 2015


நூல்: மாட்டுக்கறி பார்ப்பன மதவெறி

வெளியீடு: புதிய கலாச்சாரம்
             16, முல்லை நகர் வணிக வளாகம்
             2 - ஆவது நிழற்சாலை
             அசோக்நகர்
             சென்னை - 600 083

தொலைபேசி: 044 2371 8706
                 99411 75876, 97100 82506

மின்னஞ்சல்: vinavu@gmail.com, pukatn@gmail.com

இணையம்: www.vinavu.com

 விலை: உருவா 20
 

Monday, 13 July 2015



நூல்: இது மோடியின் காலம்

நூலாசிரியர்: பேராசிரியர் அ. மார்க்சு

வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
             11/29, சுப்பிரமணியம் தெரு
             அபிராமபுரம், சென்னை - 6000 018
தொலைப்பேசி: 044 2499 3448

இணையம்: www.uyirmmai.com

மின்னஞ்சல்:  uyirmmai@gmail.com

விலை: உருவா 135

உள்ளடக்கக் கட்டுரைத் தலைப்புகள்:

1. இந்தியத் தேர்தலில் பா.ச.க வெற்றி உணர்த்துவது என்ன?
2. சமற்கிருதம் வழக்கிழந்த வரலாறும் அதை உயிர்ப்பிக்க முனையும் அபத்தங்களும்
3. கீதை சில குறிப்புகள்
4. அசீமானந்தர்: இராமலிருட்டிண மடத்திலிருந்து அம்பாலா சிறைவரை
5. இது மோடியின் காலம்: 12 சிறு குறிப்புகள்
6. அசாம் இனக்கலவரமும் வங்கதேச முசுலிம்களும்
7. முசாபர்நகர்: வன்முறையின் அரசியல்
8. புனே முசுலிம்கள் மீதான தாக்குதல்: வீழ்ந்த முதல் விக்கட்?
9. மதக்கலவரத் தடுப்பு சட்டவரைவு
10. மோடியின் குசராத் : கோபால்மேனனின் ஆவணப்படத்தை முன்வைத்து
11. மோடியின் குசராத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட கதை
12. இந்துத்துவ அறிவியல்
13. இந்து ராட்டிரம் எப்படி இருக்கும்?
14. இளம்பெண்ணைத் தொடர்ந்த மோடியின் ஆட்கள்
15. என்கவுண்டர் கொலைகாரன் வன்சாராவின் பதவிவிலகலும் ஆனைப்பொறுப்பும்
16. சிறப்புப் புலனாய்வுப் படை மோடிக்கு ”கிளீன் சிட்” கொடுத்த வரலாறு
17. மோடியின் பார்வையில் படேலும் நேருவும்
18. திசம்பர் 6: அந்த மூவர்
19. தமிழகத்தில் இந்துத்துவம்
20. காவி பயங்கரவாதம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது?
21. எச். ராசாவின் வெறுப்புப் பேச்சுகள்
22. சன் தொலைக்காட்சி வீரபாண்டியன் மீது இந்துத்துவத்தின் தாக்குதல்
23. இந்துத்துவப் பாசிசத்தின் பன்முக அடையாளங்கள்
24. இந்துத்துவம் மேற்கொள்ளும் மதமாற்றங்கள்

Thursday, 9 July 2015

நூல்: ”முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” (கல்விச்சிந்தனைகள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு)




நாளிதழகள், இணைய இதழ்களில் வந்த ஆசிரியரின் காலத்திற்கேற்ற கட்டுரைகளே ”முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” என்ற கட்டுரைத் தொகுப்பாக வந்துள்ளது. இத் தொகுப்பின் ஆசிரியரான நா.முத்துநிலவன் உலகறிந்த பட்டிமன்றப் பேச்சாளர், பாடகர், கவிஞர், கட்டுரையாளர், சமூகச் சிந்தனையாளர், வலைப்பதிவாளர், கருத்தரங்குகளில் மொழி சார்ந்தும், சமூகம் சார்ந்தும் முழங்குபவர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவராக இருந்தாலும் பள்ளி ஆசிரியர் என்ற அவரின் தகுதி தான் இந்த நூலை இன்னும் வேகமெடுத்து உண்மை நிலையை உரக்கப் பேச வைக்கிறது.
பொதுவாக மதிப்பெண்களை நோக்கி ஓடவைக்கும் பற்சக்கரங்களாக இருக்கும் ஆசிரிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் என்று வந்த குரல் தான் இத்தொகுப்பை நோக்கி என்னை நகர்த்திப் போனது.
குறை சொல்பவர்களும், பிறர் மீது குற்றச்சாட்டுகளை விசிறி அடிப்பவர்களும் எப்பொழுதும் தங்களை நல்லவர்களாக அல்லது அப்படியான நிகழ்வுகளுக்குச் சம்பந்தம் இல்லாதவர்களாகக் காட்டிக் கொள்வார்கள். இந்தப் பொதுப் புத்தியை தன் கட்டுரைகளில் நா.முத்து நிலவன் பிடரியில் அடித்துச் சாய்த்திருக்கிறார். ”ஆசிரியர் உமாவைக் கொலை செய்தது யார்?” என்ற முதல் கட்டுரையில் “போராடக் கற்றுத்தந்த சங்கம் பாடம் நடத்தவும், பள்ளிக்கு வரும் பிள்ளைகளை நம் சொந்தப்பிள்ளை போல பார்த்துக் கொள்ளவும் கற்றுத் தரவில்லை” என்ற உண்மையைப் உரக்கச் சொல்கிறார்.
பாடங்கள் பிள்ளைகளுக்கு வேம்பாகவும், பள்ளிக்கூடங்கள் சிறைக்கூடங்களாகவும், ஆசிரியர்கள் அன்னியன்களாகவும் மாறிப் போனதற்கு கல்வியைத் திகட்ட,த் திகட்ட அவனுக்கு கொடுப்பதே காரணம் என வாதிடுவதோடு மட்டும் நின்றிருந்தால் இத்தொகுப்பின் ஆசிரியரும் சராசரி ஆசிரியராகத்தான் நம் முன் இருந்திருப்பார். மாறாக, காரணம் சொல்லி விட்டு மட்டும் போகாமல் காரியம் செய்யும் வழிமுறைகளையும் சொல்கிறார். ”கல்வி புகட்டப்படுவதல்ல! பூக்க வைப்பது” என்கிறார். எத்தனை பள்ளிக்கூடங்களும், ஆசிரியர்களும் அதை நிகழ்த்திக் காட்டுகிறார்கள்? யோசித்தால் வெறும் ஆற்றாமை தான் மிஞ்சுகிறது.
சமச்சீர் கல்வியைக் கொண்டு வருவதில் இருந்த சிக்கல்கள், வந்த பின் அதில் நிகழ்ந்த குழப்பங்கள், குளறுபடிகள் ஆகியவைகளுக்கான காரணங்களையும், அதற்குப் பொறுப்பானவர்களையும் தன் கூரிய கருத்துக்களால் சாடும் நா.முத்துநிலவனின் ”விண்ணப்பித்து வாங்குவதா விருது?” என்ற கட்டுரை ஆசிரியர் துறையில் இருப்பவர்கள் மட்டுமல்ல விருதுகளுக்காக கண்ணி வைத்துக் காத்திருப்பவர்களும் வாசித்து சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்று! விருது வழங்குவதில் இருக்கும் அடிப்படைத் தவறை அழகான சொல்லாடல்கள் வழி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றித் தரும் அதே சமயம் மாணவர் தேர்வு முறையைப் போல விருதுகளுக்குத் தேர்வு செய்யப்படும் முறைகளும் மாற வேண்டும் என்கிறார். ஒருமுறை கலைமாமணி விருது அறிவிப்புச் சமயத்தில் கார்டூனிஸ்ட் மதி வரைந்திருந்த கார்டூன் தான் இந்தக் கட்டுரைய படித்த போது என் நினைவுக்கு வந்தது. விருதுகளுக்கு தேர்வு செய்யும், பரிந்துரைக்கும் முறைகள் பற்றி இத்தொகுப்பில் சொல்லி இருக்கும் யோசனைகளை அலட்சியம் செய்யாமல் அரசாங்கமும், அமைப்புகளும் பரிசீலணை செய்தால் எந்த ஒரு விருதும் அதைப் பெறுபவர்களால் நிச்சயம் பெருமை கொள்ளும் என நம்பலாம்.
தொகுப்பின் தலைப்பாய் அலங்கரிக்கும் கட்டுரை பெற்றோர்கள் எல்லோரும் படிக்க வேண்டிய கட்டுரை, பாடங்களைச் செரிக்க வைக்கும் இயந்திரங்களாக பிள்ளைகளை மாற்ற வைப்பதற்கு ஆசிரியர் பிரயாசைப் படுகிறார் என்றால் அது அவர் வாங்கும் சம்பளத்திற்காக! பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு சிறக்கப் பாடுபடும் பெற்றோர்கள் அவரைப் போல பிரயாசைப்படக் கூடாது. அந்தப் பிரயாசை என்னும் பேராசை குழந்தைகள் பெற வேண்டிய பல விசயங்களை அவர்களுக்கு கிடைக்க விடாமல் செய்து விடுகிறது என்பதை கடிதமாகவே கட்டுரை பேசுகிறது. வாய்ப்பிருக்கும் குழந்தை நல அமைப்புகள் இந்தக் கட்டுரையை மட்டுமாவது பிரதி எடுத்து பொற்றோர்களுக்கு இலவசமாக வழங்கலாம்.
தனியார் பள்ளிகள் முதல் நிலையில் தங்களின் பெயரைத் தக்க வைப்ப தற்காக நிகழ்த்தும் திகிடுதத்தங்கள், அவர்களோடு அரசுப் பள்ளிகள் போட்டியில் நிற்க முடியாமல் போவதற்கான காரணங்கள், அதை முற்றாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு களையச் செய்ய வேண்டிய முன்முயற்சிகள் ஆகியவைகளைத் தன் 34 ஆண்டுகால ஆசிரிய அனுபவத்தை முன் வைத்துப் பேசும் ஆசிரியரின் கட்டுரைகள் கல்விமுறையில் அரசாங்கத்தின் பாரா முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. தோலுரித்துத் தொங்க விடுகின்றன.
கற்பிக்கும் ஆசிரியர் தன் கற்பித்தல் முறையில் முன்னேற்றம் பெறாதவரை அவரிடம் கற்கும் மாணவன் கரை சேரத் தனக்கொரு படகைத் தேடிக் கொண்டு தான் இருப்பான் என்ற உண்மையை உணர்ந்து அதை நீக்கத் தயாராகுங்கள் என தன் ஆசிரியத் தோழமைகளுக்கு வெளிப்படையாகவே அறை கூவல் விடுக்கிறார்.
சமீபத்தில் ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் டாக்டர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் அவர்கள் பேசும் போது மருத்துவக்கல்விக்கான திசுவியல் பாடத்தில் பல மாணவர்கள் தோல்வியடைந்ததற்கான காரணத்தை அவர்களிடமே விசாரித்த போது 11 ஆம் வகுப்பில் தங்களுக்கு 12 ஆம் வகுப்புப் பாடங்களை நடத்தியதால் 11 ஆம் வகுப்பிற்கான பாடநூலில் இருக்கும் திசுவியல் பாடத்தைப் பற்றி அதிகம் படிக்க முடியாமல் போய்விட்டது என்று சொன்னதாகக் கூறி தன் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டார். அதே ஆதங்கத்தை 2007 லேயே “9,11 ஆம் வகுப்புகள் தேவையில்லையா?” என்ற தலைப்பில் ஆசிரியர் கட்டுரையாக எழுதி இருப்பதை வாசித்த போது ஆச்சர்யமாக இருந்தது. ஏறக்குறைய எட்டு ஆண்டுகளாக இந்த நிலை மாறாமல் இன்றும் தொடரும் அவலத்தை என்னவென்பது?
”எனது ஆசிரியப்பணியில் சில நல்ல நாள்கள்” என்ற கட்டுரை சொல்லும் அனுபவத்தைப் பெறாத ஆசிரியர்கள் துரதிருஷ்டசாலிகள் என்றே சொல்லலாம். இந்த விசயத்தில் அதிர்ஷ்டசாலி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்கத் தான் ஆசிரியர் – மாணவர் உறவின் தன்மை இளகும். நெகிழ்ச்சியாக மாறும். அந்த இளகலும், மாற்றமும் நிகழ்ந்து கொண்டே இருந்தால் மட்டுமே ஆசிரியர் உமாவைக் கொலை செய்தது யார்? என்ற கேள்வி எதிர்காலத்தில் எழ வாய்ப்பில்லாது போகும்.

வறண்டு போன மெக்காலே பாடத் திட்டத்தை கைவிடத் தயங்கும் கல்வித்துறை, ஆட்சியாளர்களுக்கேற்ப எழுதப்படும் வரைமுறையற்ற பாடத் திட்டங்கள், தமிழ், தமிழ் என வாய் கிழியப் பேசுபவர்கள் கொல்லைப் புற வேலையாக தமிழ் மொழிக் கல்விக்குச் செய்யும் மறைமுகத் தடைகள், பாடநூல் தயாரிப்புக் குழுவினரின் எதேச்சாதிகார, பொறுப்பற்ற போக்கு, மாணவர்களுக்குத் தர வேண்டிய அடிப்படை விசயங்கள் குறித்து தெளிவில்லாத பாடத்திட்ட தயாரிப்புகள், மாணவ சமுதாயத்தை திசை திருப்புவதில் ஊடகங்களின் பங்கு, கற்றல் – கற்பித்தலில் நிகழும் குறைபாடுகள், மக்கள் மத்தியில் அரசுப் பள்ளிகளின் புறக்கணிப்பிற்கான காரணங்கள் என ஒரு அரசாங்கமும், கல்வித்துறையும் கவனத்தில் கொள்ள வேண்டிய பல விசயங்களை ஆசிரியர் நிறைய முன் தயாரிப்புகளோடும், தன் அனுபவம் கொண்டும் 18 கட்டுரைகளால் தொகுத்து தந்திருக்கும் இந்நூல் ஒவ்வொரு ஆசிரியரும் – ஆசிரியராகப் பணி செய்ய விரும்புபவரும் – பெற்றோரும் வாசிக்க வேண்டிய நூல்.
வருங்காலப் பாடத்திட்ட தயாரிப்புகளிலும், கல்விமுறை மேம்பாடுகளிலும் செய்ய வேண்டியவைகள் குறித்து ஆசிரியர்களுக்கு, பெற்றோர்களுக்கு, கல்வித்துறைக்கு என ஒரு முக்கோணமாய் அமைந்து இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பேசும் கருத்துக்களில் கவனம் கொண்டால் இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்ற வாசகம் இன்னும் நன்றாகவே வேர் பிடித்துச் செழிக்கும் என்பதில் ஐயமில்லை.
வெளியீட்டுக்கு நன்றி
ஆகஸ்ட்-02, 2015  “திண்ணை“ இணையஇதழ்

நூல்: ”முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!”

         (கல்விச்சிந்தனைகள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு)

நூலாசிரியர்: நா. முத்துநிலவன் (94431 93293)

மின்னஞ்சல்: muthunilavanpdk@gmail.com
                
வலைப்பதிவு: www.valarumkavithai.blogspot.com

இணையம்: www.muthunilavan.com

வெளியீடு: அகரம்
             மனை எண் 1, நிர்மலா நகர்
             தஞ்சாவூர் - 613 007

தொலைப்பேசி: 04362 239289